ஆப்கானிஸ்தானில் ஆதரவற்றோர் இல்லங்களில் வசித்து வரும் குழந்தைகளுடைய நிலைமை தற்போது நிலவி வரும் நிதி நெருக்கடியால் கேள்விக்குறியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு ஏற்கனவே இருந்த நிதியம் காலியாகிவிட்டதாகவும், பல லட்சம் டாலர் மதிப்பிலான நிதி உதவி பிற நாடுகளிலிருந்து வழங்கப்படுவது நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆதரவற்றோர் இல்லங்களில் வசித்து வரும் குழந்தைகளின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நாட்டின் நிதி நிலைமை வரும் குளிர் காலங்களில் அதிகரிக்கும். எனவே தலிபான்கள் ஆப்கான் மத்திய வங்கியினுடைய 9 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதனை விடுவிக்குமாறு ஐ.நா.வை கேட்டுக் கொண்டுள்ளனர்.