தீ விபத்தில் 3 ஆட்டோ, மொபட் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசாமி நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்னூர் மின்வாரிய அலுவலகம் எதிரில் உள்ள மூங்கில் கூடை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து நள்ளிரவில் மூங்கில் கழிவுகளில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இந்த தீ வேகமாக பரவி அங்கிருந்த 2 சரக்கு ஆட்டோ, ஒரு பயணிகள் ஆட்டோ, மன்கண்டனின் மொபட் ஆகியவவை தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவல் அறிந்த கண்டோன்மென்ட் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.