Categories
உலக செய்திகள்

‘இதனை பெற்றுக்கொள்ளலாம்’…. மூன்றாவது தவணை செலுத்த அனுமதி…. ஐரோப்பிய மருந்து அமைப்பு தகவல்….!!

மாடர்னா தடுப்பூசியை மூன்றாவது தவணையாக செலுத்துவதற்கு ஐரோப்பிய மருந்து அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து கட்டுப்பாட்டாளர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “மூன்றாவது தவணையாக மாடர்னா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். மேலும் இதனை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு போட்டுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது தவணை செலுத்தியவுடன் குறைந்தது ஆறு மாதம் கழித்து தான் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ள வேண்டும். தற்பொழுது பூஸ்டர் தடுப்பூசியை செலுத்துவதற்கு மாடர்னா நிறுவனம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதிலும் ஆறு முதல் எட்டு மாதங்களில் மூன்றாவது தவணை செலுத்தும் பொழுது குறைந்து வரும் ஆன்டிபாடியின் அளவு அதிகரிக்க செய்யும் என்று ஐரோப்பிய மருந்து அமைப்பு கூறியுள்ளது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஐரோப்பிய மருந்து அமைப்பு பூஸ்டர் தடுப்பூசிக்காக  Pfizer-BioNTech இன் (PFE.N) மற்றும் (22UAy.DE)  போன்றவற்றை பரிந்துரை செய்துள்ளது. குறிப்பாக குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கு மூன்றாவது தவணையாக Pfizer-BioNTech அல்லது Moderna தடுப்பூசி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |