மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடு சீனாவாகும். இங்கு அண்மைகாலமாக குழந்தைகளின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்துள்ளது. இதனை சரி செய்வதற்காக சீன தம்பதிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள கூடாது என்ற கட்டுப்பாட்டை அந்நாட்டு அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கி அறிவிப்பு வெளியிட்டது. மேலும் அவர்கள் மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்காக மானியங்கள், வரி குறைப்பு போன்ற பல்வேறு சலுகைகளை அந்தந்த மாகாண அரசுகள் அறிவித்துள்ளன.
இதனை தொடர்ந்து பீஜிங், சிச்சுவான், ஜியாங்சி போன்ற இருபதுக்கும் மேற்பட்ட மாகாணங்களில் மகப்பேறு காலத்தின் போது எடுக்கப்படும் விடுப்பு மற்றும் திருமண விடுமுறையை நீட்டித்துள்ளனர். குறிப்பாக தந்தை வழி விடுப்பையும் அதிகரித்துள்ளனர். இது போன்று விடுமுறையை முன்னிலைப்படுத்தும் சாதகமான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.