மிருகக்காட்சி சாலையில் பிறந்த மூன்று மாத இரட்டை பாண்டா கரடிகளுக்கு டோக்கியோ ஆளுநர் பெயர் சூட்டியுள்ளார்.
ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் யுனொ மிருகக்காட்சி சாலை உள்ளது. இந்த மிருகக்காட்சி சாலையில் கடந்த ஜூன் மாதம் பாண்டா கரடி ஒன்று இரட்டை குட்டிகளை பெற்றேடுத்துள்ளது. அவை ஆண் மற்றும் பெண் பாண்டா குட்டிகளாகும். இதனை அடுத்து மிருகக்காட்சிசாலையின் நிர்வாகம் பாண்டா குட்டிகளுக்கு பொருத்தமான பெயர்களை எழுதி அனுப்புமாறு மக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதனை தொடர்ந்து பாண்டா குட்டிகளுக்காக சுமார் 1,90,000 பெயர்கள் எழுதி அனுப்பப்பட்டன.
இதிலிருந்து இரண்டு பெயர்களை மிருகக்காட்சி சாலை நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. மேலும் பெயர் சூட்டும் விழாவானது மிருகக்காட்சி சாலையில் நேற்று நடந்துள்ளது. இந்த பெயர்சூட்டு விழாவில் டோக்கியோ ஆளுநர் யுரிகோ கோய்கே கலந்து கொண்டு குட்டிகளுக்கு பெயரை சூட்டியுள்ளார். அதில் ஒரு பெண் பாண்டா குட்டிக்கு லெய் லெய் என்றும் மற்றொரு ஆண் பாண்டா குட்டிக்கு ஸியோ ஸியோ என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.