Categories
மாநில செய்திகள் வானிலை

மூன்று நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கனமழை…!!

தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி நாமக்கல் கல்லங்குறிச்சி அரியலூர் பெரம்பலூர் திருச்சி கரூர் கடலூர் விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் 3 நாட்களுக்கு தென்தமிழகம் மாவட்டங்களான கன்னியாகுமரி தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி மதுரை தேனி திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் விருதுநகர் தஞ்சை திருவாரூர் நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடகா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Categories

Tech |