மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள வடுகபாளையம் பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கருப்பாத்தாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்து விட்டதால் கருப்பாத்தாள் தனது மகன் வெள்ளிங்கிரி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பாத்தாள் வயோதிகம் காரணமாக நோய் ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த கருப்பாத்தாள் தன் குடும்பத்தினரிடம் உடல் வலி தாங்க முடியவில்லை என கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கருப்பாத்தாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து வெளியே சென்று திரும்பிய வெள்ளிங்கிரி தாய் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கருப்பாத்தாளின் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.