Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

முட்புதரில் கிடந்த மூதாட்டி… அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மூதாட்டியை தாக்கி நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காசிபாளையம் பகுதியில் இந்திரா என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த மூதாட்டி தனது வீட்டிற்கு அருகே இருக்கும் தாமரைக் குளத்தின் பின்புறம் ஆடுகளை மேய்த்துள்ளார். இதனை அடுத்து மாலை நேரம் ஆகியும் இந்திரா வீட்டிற்கு திரும்பி வராததால் அவரது குடும்பத்தினர் மூதாட்டியை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் முட்புதரில் இந்திரா படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த வானூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மூதாட்டியான இந்திராவை மர்ம நபர்கள் தாக்கியதோடு, அவர் அணிந்திருந்த மூக்குத்தி மற்றும் பணத்தை பறித்து விட்டு தப்பி சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மூதாட்டியை தாக்கி நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |