Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

அருமையான ஐடியா..!மூட்டுவலி வந்தா கவலை ஏன்… எளிய டிப்ஸ்..!!

மூட்டுவலி சீக்கிரம் குணமாக இதை சாப்பிட்டால் போதும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இப்போதெல்லாம் 30 வயதைத் தாண்டி விட்டாலே மூட்டு வலி வர ஆரம்பித்து விடுகின்றது. இந்த மூட்டு வலியை வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டு ரொம்ப எளிமையாக போக்கி விடலாம். அதை பற்றிதான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். இப்போது சொல்லப்போகும் அதில் ஏதாவது ஒன்றை பின்பற்றினாலே போதும், உங்கள் மூட்டு வலி படிப்படியாக குறைய ஆரம்பித்துவிடும்.

மூட்டுவலி தீர டிப்ஸ்:

*ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கொஞ்சம் எடுத்து தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் அதை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.

*அரை டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில்  இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி தேனும் கலந்து கொள்ள வேண்டும். இதை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

*ஒரு டேபிள்ஸ்பூன் பாசிப்பருப்பை, இரண்டு பூண்டு பல்லோடு நன்றாக வேகவைக்க வேண்டும். இதை  ஒரு நாளைக்கு 2 முறை சாப்பிட்டு வந்தாலே போதும் மூட்டு வலி அனைத்தும் குறைந்துவிடும்.

*தூதுவளை இலை கிடைத்தால் அதை மைபோல அரைத்து பசும்பாலில் கொஞ்சம் கலந்து காலையிலும், மாலையிலும் அதை குடித்து விட்டு வந்தாலே போதும். கை,கால்,வலி குணமாகிவிடும்.

*பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் இது ஒவ்வொன்றிலும் பத்து, பத்து கிராம் எடுத்து அரைத்து காலையில் சாப்பிட்டால் மூட்டு வலி மட்டுமல்லாமல் மூட்டுத் தேய்மானம் இவை அனைத்தும் குறையும்.

*முடக்கத்தான் இலையை எடுத்து நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறைய ஆரம்பித்துவிடும். மூட்டுவலி போக்குவதற்கு ஒரு அருமையான மருந்து தான் முடக்கத்தான் இலை.

*ஒரு கைப்பிடி அளவு எடுத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். சாதாரண தோசை மாவைக் கலந்து சாப்பிட்டு வந்தால், அந்த கசப்பு தெரியாது. வாரத்திற்கு இரண்டு நாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி உங்க பக்கமே எட்டிப்பார்க்காது.

*சூடான பாலில் மூன்று ஏலக்காயை உடைத்து போட்டு கொஞ்சம் மஞ்சள் பொடியும் சேர்த்து தினமும் இரவு நேரங்களில் குடித்து வந்தால் மூட்டுவலி குறையும்.

*நாட்டு மருந்து கடைகளில் அஸ்வகந்தா பொடி வாங்கிக்கொள்ளுங்கள் 170 மில்லி தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். 40 மில்லி பால் எடுத்துக் கொள்ளுங்கள் இதை இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொண்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள்.

*இதில் அஸ்வகந்தா பொடி 5 கிராம் எடுத்து கலந்துகொள்ளுங்கள். தண்ணீரில் நன்றாக வற்றி பால் மட்டும் தங்கும் அது வரை கொதிக்க விட வேண்டும். அதன் பிறகு இதை எடுத்து குடித்தால் மூட்டு வலி ரொம்ப சீக்கிரமாகவே போய்விடும்.

*சுக்கு, தனியா, வெல்லம், சீரகம் இவை எல்லாத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தாலே போதும், மூட்டுவலி குணமாகும்.

மூட்டுவலி வந்தால் சாப்பிட வேண்டியவை:

  1. வாழைப்பழம் அதிகமாக சாப்பிட வேண்டும்.
  2. காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும்.
  3. கேரட், பீட்ரூட் இவை எல்லாம் பச்சையாக சாப்பிடவேண்டும்.
  4. கால்சியம் அதிகமாக இருக்கின்ற பால் பால் சம்பந்தமான பொருட்கள், முள் நிறைந்த மீன் வகைகள் இவை எல்லாம் சாப்பிட வேண்டும்.

எதை சாப்பிட கூடாது:

  1. காரமான வறுத்த உணவுகளை சாப்பிடக்கூடாது.
  2. டீ காபி அதிகம் குடிக்க கூடாது.
  3. பகல் தூக்கம் இருக்கவே கூடாது.
  4. முக்கியமாக மனக் கவலையும், மன அழுத்தமும் இல்லாமல் இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

Categories

Tech |