Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொபட்-கார் மோதல்… பெண்களுக்கு நடந்த விபரீதம்… நாமக்கல்லில் கோர விபத்து…!!

மொபட் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்துள்ள சின்னகோட்டபாளையத்தில் குழந்தைவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் மாதம்மாள் என்பவரும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் வேலையை முடித்துவிட்டு சின்னத்தம்பிபாளையத்திலிருந்து நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளனர்.

இதனையடுத்து சின்னகோட்டபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கள்ளுக்கடை மேடு அருகில் மொபட்டில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே வந்த கார் எதிர்பாரதவிதமாக மொபட் மீது நேருக்கு நேர் மோதி நிலை தடுமாறி ஓடிய நிலையில் சாலையோரம் சென்று கொண்டிருந்த மகேஸ்வரி மற்றும் மாதம்மாள் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

மேலும் மாதம்மாள் மற்றும் மொபட்டில் சென்ற பிரகாஷ் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் திருச்செங்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் காரை ஓட்டி வந்த கேரளாவில் வசிக்கும் சாவிக் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற மல்லசமுத்திரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Categories

Tech |