திண்டுக்கல் மாவட்டத்தில் கணவன்,மனைவி சென்ற மொபெட் மீது லாரி மோதி மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகிலுள்ள கேதம்பட்டியை சேர்ந்தவர் மோகன் என்பவர். அவருக்கு திருமணமாகி அஞ்சலை என்னும் மனைவி இருந்துள்ளார். மோகன் தனது மனைவியுடன் நேற்று மாலை வேடச்சந்தூர்க்கு மொபட்டில் வந்தார்.அதன் பின் அங்கிருந்த வேலைகளை முடித்துவிட்டு அவர் ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வேடர்சந்தூலிருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி விறகு ஏற்றிச்சென்ற லாரி திடிரென்று மொபட் மீது மோதியது. இதனால் மொபட்டில் இருந்து கீழே விழுந்த அஞ்சலையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோகன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
மோகன் கண்ணெதிரே மனைவி இறந்து கிடப்பதைப் பார்த்து அவர் கதறி அழுதார். மேலும் இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.