ஊரடங்கு உத்தரவை மேலும் 1 மாதம் நீட்டிக்க வேண்டும் என்று ஒடிஷா மாநில அரசு தெரிவித்துள்ளது.
மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். காலை முதல் 9 மாநில முதல்வர்களுடன் பேசிய பிரதமரிடம் 4 மாநில முதல்வர்கள் பொது ஊரடங்கை மேலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். குறிப்பாக ஒரிசா அரசைப் பொறுத்தவரை நாங்கள் தீவிரமான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். ஆனாலும் கூட கொரோனாவின் தாக்கம் என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஊரடங்கு உத்தரவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்று ஒரிசா மாநில அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனை ஒரிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஒரிசா மாநில அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு மாநில அரசுகளும் ஒப்புதல் வழங்கியுள்ளன. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட புதுச்சேரி அரசு கூட ஊரடங்கை நீட்டிக்கப்பட வேண்டும். சில குறிப்பிட்ட தளர்வு மட்டும் தான் இருக்க வேண்டும். குறிப்பாக தொழிற்சாலைகள் இயங்கலாம், பொது போக்குவரத்து இருக்கக் கூடாது என்று புதுச்சேரி தெரிவித்துள்ளது.
அதே போல மேகாலயா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் அரசுகளும் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்பதனை திட்டவட்டமாக கூறி இருக்கின்றார்கள். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஊரடங்கை நீட்டிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மொத்தத்தில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு இருக்கும் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.