கோவிலில் பணிபுரியும் பணியாளர்கள் 100-க்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றின் பாதிப்பானது குறைந்திருப்பதால் அப்பகுதியில் இருக்கும் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு அரசு வழிகாட்டுதலின் நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் கோவில்களில் பூசாரிகள், கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனை அடுத்து மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தியின் உத்தரவின்படி பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி ஏற்பாடு செய்த கச்சபேஸ்வரர் கோவிலில் வைத்து தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றுயுள்ளது. இந்த முகாமில் இம்மாவட்டத்தின் கோவில்லின் பணியாளர்கள் 100-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டு சென்றுள்ளனர்.