சேலத்தில் கடந்த 3 மாதத்தில் 12,609 குழந்தைகள் பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் இன்று வரை ஐந்து கட்டமாக தொடர்ந்து அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்திலும் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட அவசர சிகிச்சைகளுக்காக அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் மொத்தம் 118 அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையம் , மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கப் பட்டு வந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து மருத்துவமனைகளிலும், சாதாரணமாக ஒரு மாதத்திற்கு 3,800 முதல் நான்காயிரம் குழந்தைகள் வரை சராசரியாக பிறக்கும். ஆனால் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மட்டும் கடந்த மூன்று மாதங்களில் கணக்கிடுகையில், 12,609 குழந்தைகள் பிறந்துள்ளன.
இதற்கான தகவல் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து சேகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பார்க்கையில், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம்அதிகரித்துக் காணப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.