Categories
தேசிய செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்களின் போக்குவரத்துக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவேண்டும்: மத்திய உள்துறை!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் போக்குவரத்திற்காக கூடுதல் பேருந்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களின் பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் அவர்களுக்கான ஓய்வு கூடங்களை ஏற்படுத்த வேண்டும் என உள்துறை செயலாளர் அஜய்பல்லா கூறியுள்ளார். மேலும் ரயில் அட்டவணை, டிக்கெட் முன்பதிவு தகவல் ரயில்வே மூலம் விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் 4ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிமாநில தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்க கூடுதல் பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகளை அதிகரிக்க மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், நான்காம் கட்ட ஊரடங்கிற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை குறைத்து விட வேண்டாம்; விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என, மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

Categories

Tech |