உத்தரபிரதேசத்தில் மோடி எதிர்கட்சிகளை விட கூடுதலாக 20 பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.
உத்தரபிரதேசத்தில் வருகின்ற ஏப்ரல் 7_ஆம் தேதி உ.பி.யின் சஹரான்பூரில் மாயாவதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் அகிலேஷ், மாயாவதி இணைந்து பேசும் முதல் பிரசார கூட்டம் நடைபெற இருக்கின்றது . பாஜக_வுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் மெகா கூட்டணி அமைத்துள்ள அகிலேஷ் யாதவ், மாயாவதி மற்றும் அஜித்சிங் மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்கு உத்தரபிரதேச மாநிலத்தில் 11 கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
இந்நிலையில் எதிர்கட்சியினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக இதை விட அதிகளவில் பிரசார கூட்டத்தை நடத்துவதாக தெரியவந்துள்ளது . அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலத்தில் 20 பிரச்சாரக் கூட்டங்களில் பேச இருப்பதாக சொல்லப்படுகின்றது. ஏற்கனவே கடந்த 2017-ல் நடைபெற்று முடிந்த உ.பி மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி 12 பிரசார கூட்டங்களுக்கு திட்டமிட்டார் . பின்னர் தொண்டர்களின் ஆதரவால் பிரச்சாரக் கூட்டங்களின் எண்ணிக்கையை 21_ஆக அதிகரித்து பங்கேற்றார். இதில் பாஜக தனிபெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது.