பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் திரைப்படங்கள் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இதில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் கோல்டன் குளோப் விருதுகளில் நாமினேட் ஆகியுள்ளதால், பலரும் இயக்குனர் ராஜமவுலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இயக்குனர் ராஜமவுலி சமீபத்திய பேட்டியில் பாலிவுட் சினிமாவின் தொடர் தோல்வி குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, ஹிந்தி சினிமாவில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் இயக்குனர்கள் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு சம்பளத்தை அள்ளிக் கொடுக்கிறார்கள்.
இதனால்தான் படங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் குறைந்துவிட்டது. இந்த வருடம் ஹிந்தியில் வெளியான படங்களில் ஒரு சில மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மக்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு படத்தை இயக்குவது தான் வெற்றிக்கான தாரக மந்திரம். தென்னிந்திய சினிமா தற்போது நல்ல வளர்ச்சி பெற்று வரும் நிலையில், பாலிவுட் சினிமாவும் இதே போன்று வெற்றி பெற வேண்டும் எனில் சற்று அதிகமாக நீச்சல் அடிக்க வேண்டும். இல்லையெனில் மூழ்கி விடுவார்கள் என்று கூறியுள்ளார். மேலும் இயக்குனர் ராஜமவுலியின் பேச்சு தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.