Categories
தேசிய செய்திகள்

” சிவப்பு விளக்கு பகுதியில் அதிக முஸ்லீம் பெண்கள் ” பாஜக MLA சர்சை பேச்சு …!!

சிவப்பு விளக்கு பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் அதிகளவில் உள்ளனர் என்று ஒடிஷா மாநில  பா.ஜ.க. MLA பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியில் இரண்டாவது முறையாக பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு விதங்களில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதான குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. முஸ்லீம் மக்களை ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல சொல்லி துன்புறுத்துவது என்று பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. மேலும் மாநிலங்களவையில் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லாத நிலையிலும்  முத்தலாக் தடை சட்ட மசோதாவை நிறைவேற்றியது. இந்த சட்டமசோதாவுக்கு இரு அவைகளிலும் எதிர்ப்பு எழுந்தாலும் இறுதியாக வாக்கெடுப்பு முறையில் நிறைவேற்றபட்டது.

Image result for bishnu charan sethi

இதையடுத்து இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அளித்ததையடுத்து  முத்தலாக் தடை சட்டம் அரசாணையும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஒடிசா மாநில சட்டசபையில் பா.ஜ.க_வின் சட்டசபை துணை தலைவர் பி.சி. சேத்தி முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவாக  பேசும்பொழுது, மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களில் உள்ள சிவப்பு விளக்கு பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் அதிகளவில் உள்ளனர் என்று சர்சை கருத்தை கூறினார். இதற்க்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Categories

Tech |