தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு குறையும் என கூறியிருந்தோம் அதேபோல் நடக்க உள்ளது என்று மருத்துவ நிபுணர் குழு தெரிவித்து உள்ளது.
தமிழக முதல்வர் பழனிசாமி உடனான ஆலோசனைக்குப் பின்னர் மருத்துவ குழுவினர் பிரதிநிதி குகானந்தம் செய்தியாளர்களிடம் பேசினார் . அப்போது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கும். பரிசோதனைகள் அதிகமாக செய்து பாதிப்பை கண்டறிந்து உயிரிழப்பை தடுக்க முடியும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை செய்ய கூறியுள்ளோம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு குறையும் என கூறியிருந்தோம், அதேபோல் நடக்க உள்ளது .
தமிழகத்தில் நியமனம் செய்யப்பட்ட 12 ஆயிரத்து 500 மருத்துவ பணியாளர்களின் பாதி பேர் சென்னையில் போடப்பட்டு உள்ளார்கள். அதேபோல மக்கள் தனிமைப்படுத்தும் விஷயங்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சோதனை செய்வது அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள சுகாதார மையங்களிலும் அதிக வசதிகளை செய்துள்ளோம். சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி நோயை கட்டுப்படுத்த பரிந்துரை செய்துள்ளோம் என்று மருத்துவ நிபுணர் குழு தெரிவித்தனர்.