பங்களாதேஷில் ஊரடங்கை மீறி ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இறுதிசடங்கில் கூடியது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமியர்களின் தலைவரான மௌலானா ஸுபைர் அஹ்மத் அன்சாரின் இறுதி சடங்குக்கு 5 பேருக்கு மேல் கூட கூடாது என்று அறிவுறுத்தி இருந்த நிலையிலும் கட்டுக்கடங்காத அளவு மக்கள் வந்து கூடியுள்ளனர். இஸ்லாமிய அமைப்பின் தலைவர் என்ற காரணத்தால் அவருக்கு இறுதி சடங்கு நிகழ்த்த மக்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். பிரஹ்மன்பரியா மாவட்டத்தில், சாலைகளில் மக்கள் அதிகளவில் நிரம்பியதால் அதனை கட்டுப்படுத்த முடியாத அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்நாட்டில் 2,456 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு, 91 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், பாதிப்பின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்க கூடும் என்றும், பரிசோதனை கருவிகளின் குறைப்பாட்டினால் குறைந்த அளவில் கணக்கிடப்பட்டுள்ளது என அதிகாரிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இறுதிச்சடங்கில் அதிக அளவில் மக்கள் ஒன்று கூடியது பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.