பீகார் மாநிலம் பாட்னாவில் வீட்டில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பீகார் மாநிலம் பாட்னாவில் காந்தி மைதான் பகுதியில் இருக்கும் ஒரு வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு திடீரென வெடித்ததாகவும், இதில் அருகிலுள்ள வீடுகளும் முற்றிலுமாக இடிந்து சேதமடைந்துள்ளதாகவும் பாட்னா போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோரை மீட்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வீட்டில் குண்டு வைத்தவர்கள் யாரென்றும், அது வெடித்ததன் காரணம் குறித்தும், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.