Categories
உலக செய்திகள்

100 க்கு அதிகமான துப்பாக்கி குண்டுகள்… போதைபொருள் கடத்தல் மன்னனின் அராஜகம்… கொலை செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி..!!

மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் கும்பலால் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்ஸிகோவை சேர்ந்த பிரபல கடத்தல் மன்னன் எல் சாப்போ மெக்சிகோ நாட்டில் தனியாக ஒரு போதைப்பொருள் சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறார். இவர் அமெரிக்காவிலும் போதை பொருள் விற்பனை செய்துவந்தார். மெக்சிகோவில் பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும் சுரங்கப்பாதை வழியாக பலமுறை தப்பிச் சென்றுள்ளார். 2017 ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டு உயர் பாதுகாப்புடன் கொலராடோ மாகாணத்தில் உள்ள சிறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

எல் சாப்போ சிறையில் இருந்தபோதும் அவரின் உதவியாளர்கள் போதைப்பொருள் கடத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து போதைப்பொருள் கும்பலை ஒழிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து கடத்தலை தடுக்கும் நடவடிக்கையில் மெக்சிகோவை சேர்ந்த ரமோன் முனிஸ் என்பவர் போலீஸ் துறையின் மூத்த அதிகாரியாக செயல்பட்டு வந்தார்.

இவர் பணியாற்றி வரும் மாகாணத்தில் எல் சாப்போவின் கும்பலால் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தை செய்ய முடியவில்லை. எனவே அந்த மூத்த அதிகாரி கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டனர். பின்னர் ரமோன் முனீஸ் கடந்த வியாழக்கிழமை காலை ஏழு முப்பது மணி அளவில் க்யுலிஹன் தெரு பகுதியில் சாலையில் தனது காரில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேர் தாங்கள் வைத்து மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கண்மூடித்தனமாக போலீஸ் அதிகாரியை தாக்கியுள்ளனர். நூற்றுக்கும் அதிகமான குண்டுகளால் அவரை சுட்டுள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் மெக்சிகோவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |