Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரு பஸ்ல இத்தனை தொழிலாளர்களா… அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்… கோவையில் பரபரப்பு…!!

நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்களை ஒரே பேருந்தில் ஏற்றி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகெங்கிலும் கொரோனா வைரஸின்இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் இன்று முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மத்திய வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து அதிக அளவு பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்தானது மராட்டியம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு செல்வதாக தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் படி கோவை பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் இருக்கும் சிக்னலில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு தனியார் ஆம்னி பேருந்தை நிறுத்தி விசாரித்தபோது, அந்த பேருந்தானது 100-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களுடன் பீகார் மாநிலத்திற்கு புறப்பட்டது தெரியவந்துள்ளது. அதன்பின் அதிகாரிகள் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |