மலேசியாவில் 100க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கின்றனர்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் மிரண்டு வருகின்றது. பல்வேறு நாடுகளும் அண்டை நாடுகளுடனான போக்குவரத்து சேவையை முடக்கியுள்ளது. இந்தியாவில் பரவி உள்ள இந்த வைரஸ் காரணமாக 100க்கும் மேற்பட்ட பாதிக்கபட்டுள்ளனர். இந்நிலையில் மலேசியாவில் 100க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலேசியாவில் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும், விமானங்கள் தாமதமாவதாலும் மாணவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். மலேசியாவில் சிக்கி தவிக்கும் 200க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களின் 100க்கும் மேற்பட்டோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். பிலிப்பைன்ஸில் இருந்து வந்த 3 விமானங்கள் மலேசியாவில் தரையிறங்கியது, அங்கிருந்து மாணவர்கள் தாயகம் திரும்ப முடியவில்லை.
இந்திய தூதரகத்தில் ஏராளமான மாணவர்கள் இந்தியா திரும்புவதற்காக இன்னும் காத்திருக்கிறார்கள். கொரோனா அச்சம் காரணமாக மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு பயணிகள் வர தடை என்பதால் மாணவர்கள் தவிப்பு. ஏராளமான மருத்துவ மாணவர்களும், மாணவிகளும் மலேசியா கோலாலம்பூர் விமான நிலையத்தில் சிக்கி தவிக்கின்றனர். பிலிப்பைன்ஸில் இருந்து புறப்பட்ட 150க்கும் மேற்பட்ட தமிழக மருத்துவ மாணவர்கள் மலேசியாவில் சிக்கி தவிக்கின்றனர்.