Categories
உலக செய்திகள்

உக்ரைனிலிருந்து 26 லட்சம் மக்கள் வெளியேற்றம்… ஐ.நா அகதிகள் நல அமைப்பு தகவல்…!!!

உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேறிய மக்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை தாண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உலக நாடுகள் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர மேற்கொண்ட முயற்சிகள்  பலனளிக்காமல் போனது. எனவே, உக்ரைன் போர் உலகளவில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயத்தில் ரஷ்யப் படைகள் ஒவ்வொரு நாளும் தாக்குதலை தீவிரப்படுத்தி கொண்டிருக்கின்றன.

இதனால் உக்ரைனின் முக்கிய நகரங்கள் முழுக்க நிலைகுலைந்து போயிருக்கிறது. அந்நாட்டில், பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை. அந்த அளவிற்கு ரஷ்யப் படைகள் நாடு முழுக்க தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கின்றன. இந்நிலையில் நேற்று 18ஆம் நாளாக நடந்த போரில் ரஷ்ய படைகள் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்களில் உக்ரைன் நாட்டின் பல நாகர்கள் நிலைகுலைந்து போயிருக்கிறது.

இந்நிலையில், போரால் பாதிப்படைந்த உக்ரைன் நாட்டிலிருந்து பக்கத்து நாடுகளுக்கு தஞ்சமடையும் மக்கள் எண்ணிக்கை 26 லட்சத்தை தாண்டியிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இது பற்றி ஐநா அகதிகள் நல அமைப்பானது வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தற்போது வரை உக்ரைன் நாட்டிலிருந்து 26,98, 280 மக்கள் வெளியேறியிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது.

Categories

Tech |