தமிழகத்தில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் 6-வது இடத்தில் நீடிக்கிறது.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் மேலும் 231 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்..இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,526ல் இருந்து 2,757 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் சென்னையை சேர்ந்த 76 வயது மூதாட்டி இன்று கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இதனால் பலியானோரின் எண்ணிக்கை 28ல் இருந்து 29ஆக உயர்ந்துள்ளது.. அதேபோல தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 29 பேர் குணமடைந்தனர். இதனால் தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,341 ஆக உயர்ந்துள்ளது.