மியான்மரில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட சடலங்களால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மியான்மர் நாட்டில் உள்ள கயா மாநிலத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட சடலங்கள் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. மேலும் மியான்மர் நாட்டை ஆட்சி செய்யும் ராணுவத்தினரால் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது மியான்மரை சேர்ந்த ராணுவத்தினர் தங்கள் நாட்டிற்குள் புலம்பெயர்ந்த மக்களை சுட்டு கொன்றதோடு எரித்துள்ளனர்.
அவ்வாறு எரிந்த நிலையில் கிடந்த 30-க்கும் மேற்பட்ட சடலங்களை நாங்கள் கண்டெடுத்தோம் என்று மனித உரிமைகள் குழு தகவல் தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இந்த கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயலை அரங்கேற்றிய ராணுவத்தினரை வன்மையாக கண்டிக்கிறோம் என்றும் கூறியுள்ளது.
ஆனால் மியான்மர் ராணுவத்தினரோ நாங்கள் Mo So என்ற கிராமத்தில் ஆயுதங்களுடன் கூடிய பயங்கரவாதிகளை தான் சுட்டு கொன்றோம் என்று ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் ஏழு வாகனங்களில் வந்து கொண்டிருந்த போது எங்களுடைய ராணுவம் தடுத்து நிறுத்தியும் நிற்காமல் சென்றதால் தான் இந்த கொடூரத்தை செய்ததாக இராணுவத்தினர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.