Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மதுபான கடையை திறப்பதற்கு எதிர்ப்பு…. 50க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்..!!

ஈரோடு கோபிசெட்டிபாளையம் பகுதியில் அரசு மதுபான கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் பகுதிக்கு அருகில் உள்ள சிங்கிரி பாளையத்தில் நூற்றுக்கும் மேலான வீடுகளில் 500க்கும் மேலான மக்கள் வசித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஊருக்குள் செல்கின்ற முக்கிய சாலையின் வழியே அரசு மதுபானக்கடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு கூறி அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேலான பெண்கள் கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதனை அறிந்த கடத்துர் காவல் நிலையத்தை சேர்ந்த 20க்கும் மேலான காவல் துறையினர் போராட்டத்தில் இறங்கிய பெண்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது பிரதான சாலையிலிருந்து தங்களின் கிராமத்திற்கு செல்வதற்கு இந்த சாலை தான் முக்கிய சாலையாக இருக்கின்றதாகவும் தற்போது கொரோனா ஊரடங்கால் பேருந்துகள் இல்லாத காரணத்தால் பெண்கள் வேலைக்கு சென்று இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்ப இரவு நேரம் ஆகிறது.

அதனால் இரவில் வீடு திரும்பும் பெண் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு எதுவும் இல்லை என்றும், குடிமகன்கள் மது அருந்தி சாலையிலேயே அமர்ந்து பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார்கள். இதனைத் தொடர்ந்து கடத்தூர் காவல்துறையினர் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினார். அதனடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டுவிட்டு  கோபிச்செட்டிப்பாளையம் கோட்டாட்சியரிடம் மனு அளிப்பதற்காக கலைந்து சென்றார்கள். இந்த போராட்டத்தால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவியது.

Categories

Tech |