அத்திவரதரின் 8ஆம் நாள் வைபவதில் இளஞ்சிவப்பு பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்திவரதரின் வைபவ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 48 நாட்கள் மட்டுமே நடைபெறும் அத்திவரதர் உற்சவதின் எட்டாம் நாளான இன்று அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு அருள் தருகிறார்.வழக்கம் போல் இன்று அதிகாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு அத்திவரதர், பொதுமக்களுக்கு காட்சியளித்து வருகிறார் .
40 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் தரிசனம் கொடுக்கும் அத்திவரதரை காண சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அதிகமானோர் மகிழ்ச்சியுடன் கண்டு வருகின்றனர்.தினமும் யாரும் எதிர்பாராத வகையில் 70,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர் இதுவரை மட்டும் 1,20,000 பேர் தரிசனம் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது