சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரில் 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் தான் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அப்போது அந்த வைரஸ் காரணம் புரியாத நிமோனியா என அடையாளப்படுத்தப்பட்டதாகவும் அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும் தொடர்ந்து ஆய்வு செய்த போது தான் அது கொரோனா வைரஸ் என்று உறுதிபடுத்த பட்டதாக தெரிவித்துள்ளது.
சீனாவில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து நாளுக்கு நாள் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. இந்த நிலையில் தற்போது அங்கு பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு தற்போது மொத்தம் 81,740 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 77,167 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 3,331 பேர் இறந்துள்ளனர் என்றும், 1, 242 பேர் மட்டுமே சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.