Categories
தேசிய செய்திகள்

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா..? அப்ப இத கண்டிப்பா பண்ணுங்க..!!

நாம் வங்கியில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை வைத்து இருந்தால் என்ன தீமைகள் நடக்கும் என்பதை இதில் பார்ப்போம்.

ஒருவர் வங்கிக் கணக்கை பராமரிக்க குறைந்தபட்ச இருப்பு தொகை இருக்க வேண்டும். இல்லாவிடில் வங்கி உங்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படும். இதில் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கை தொடங்கியிருந்தால், அனைத்து வங்கிகளிலும் குறிப்பிட்ட இருப்புத் தொகையை நீங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். வங்கி கணக்கில் இருந்து முதலீடு, கடன், வர்த்தகம், கிரெடிட் கார்ட், செலுத்துதல் மற்றும் காப்பீடு தொடர்பான கட்டண இணைப்புகளும் இதில் உள்ளன.

பொதுவாக ஊழியர்கள் வேலை நிறுவனத்தை மாற்றும்போது சம்பளத் தொகைக்காக புதிய வங்கி கணக்கு தொடங்குவார்கள். ஆனால் பழைய வங்கி கணக்கு மூடப்படாத, ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கு இருந்தால் அது செயலற்று ஆகிவிடுகிறது. இதில் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக சம்பள கணக்கில் பணம் செலுத்தி விட்டால், அது தானாகவே சேமிப்புக்கு கணக்காக மாறிவிடும். இந்த விதிகளின்படி குறைந்தபட்ச நிலுவைத்தொகை அதாவது குறைந்தபட்ச தொகையை கணக்கில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கு வைத்திருந்தால் வருமான வரி செலுத்தும் போது பல சிக்கல் ஏற்படும். ஒவ்வொரு வங்கி கணக்குகள் தொடர்பான தகவல்களையும் நீங்கள் தவறாமல் கொடுக்கவேண்டும். பல வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் சரியாக ஆவணத்தை வைத்திருப்பதில்லை. மேலும் பல வங்கிகளில் பாதுகாப்பும் சரியானதாக இல்லை. கணக்கு மூடுவதற்கு ஒரு படிவம் நிரப்ப வேண்டியிருக்கும்.

இல்லை என்றால் வங்கி அபராதம் விதிக்கும். வங்கி கிளையில் கணக்கு மூடல் படிவத்தை எடுத்த பிறகு அதிலுள்ள கணக்கை மூடுவதற்கான காரணத்தை தெளிவாக கூற வேண்டும். கணக்கு வைத்திருப்பவர்களின் கையெழுத்தும் கட்டாயம். மூடிய கணக்கில் மீதமுள்ள பணத்தை மாற்ற விரும்பும் கணக்கின் தகவலை வங்கியிடம் கொடுக்க வேண்டும். கணக்கை திறந்த 15 நாட்களுக்குள், கணக்கு மூடுவதற்கான வங்கிகள் எந்தவிதமான கட்டணத்தையும் வசூலிப்பதில்லை. கணக்கை திறந்து 14 நாட்களுக்கு பிறகு அதை மூடி விட்டு ஒரு வருடம் நிறைவடைவதற்கு முன்பு கணக்கு மூடல் கட்டணத்தை செலுத்தி இருக்க வேண்டும்.

Categories

Tech |