மோர்க்குழம்பு
தேவையான பொருட்கள் :
தயிர் – 1/2 லிட்டர்
ஊறவைத்த துவரம்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
மிளகாய் – 3
எண்ணெய் – 2 ஸ்பூன்
வெந்தயம் – 1/2 ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
வரமிளகாய் – 3
சின்னவெங்காயம் – 50 கிராம்
பெருங்காயம் – சிறிது
கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் – சிறிது
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் தயிரை மிக்சியில் போட்டு நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். துவரம்பருப்புடன் சீரகம் ,இஞ்சி , சீரகம் மற்றும் மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் .பின் இதனை தயிரில் கலந்து தேவையான தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும் . கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , வெந்தயம் , வரமிளகாய் ,சின்ன வெங்காயம் , பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மோர் , மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் சுவையான மோர்க்குழம்பு தயார் !!!