Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“8 மாநிலங்களில் வெடிகுண்டு தாக்குதல்” பொய் தகவல் அளித்த மர்ம ஆசாமி கைது…!!

தமிழகம் பல முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் பெங்களூரு போலீசாருக்கு பொய் தகவல் அளித்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஓசூரில் இருந்து நேற்று பகலில் மர்ம நபர் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்புகொண்டு ஒரு திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். அதில் தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி, மராட்டியம், தெலுங்கானா, கோவா உள்ளிட்ட பல முக்கிய மாநிலங்களில், குண்டு வெடிக்கும் என்றும், ராமநாதபுரத்தில் இதற்காக 19 பயங்கரவாதிகள் நுழைந்திருக்கிறார்கள் என்றும், குறிப்பாக தென்னக ரெயில்களில் குண்டு வெடிக்க அதிக வாய்ப்பு  உள்ளதாகவும் தகவலை சொல்லிவிட்டு அந்த மர்ம ஆசாமி போனை வைத்து விட்டார்.

Image result for man

இந்த தகவலை பெங்களூரு போலீசார் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பி இந்த தகவலை முக்கியமான தகவலாக கருதி, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் தொலைபேசியில் தகவல் தெரிவித்தவர் பொய் அழைப்பை விடுத்தவர் என்று தெரியவந்துள்ளது. பொய் தகவல் அளித்த அந்த நபரை போலீசார் தேடிவந்த நிலையில் அந்நபர் சுவாமி சுந்தர் மூர்த்தியென தெரியவந்ததை அடுத்து பெங்களூரு போலீஸ் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதில் அவர் முன்னாள் ராணுவ வீரர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |