உடல் கொழுப்பை குறைத்து, உடல் பருமனை குறைக்க இந்த அக்னி முத்திரை பெரிதும் பயன்படுகிறது.
கைவிரல்களை நீட்டிக்கொண்டு மோதிர விரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலால் மோதிர விரலை அழுத்த வேண்டும். மற்ற விரல்களை நீட்டிக் கொள்ள வேண்டும். இந்த முத்திரையை தினமும் காலை வெறும் வயிற்றில் உட்கார்ந்து 15 நிமிடம் பயிற்சி செய்தால், உங்களது உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உடல் பருமனைக் கட்டுப்படுத்தி, செரிமானம் நன்றாக நடக்கும்.
உடல் வலிமை அதிகரிக்கும். மன அழுத்தம் குறையும். உடலில் கொழுப்பு உண்டாவதை கட்டுப்படுத்துகிறது. எனவே இந்த முத்திரை விடியற்காலையில் வெறும் வயிற்றில் செய்தால் உடல் எடை குறைப்பதற்கு இந்த முத்திரை பெரிதும் உதவுகிறது. உடலில் கொழுப்புகளை குறைக்கவும், செயல்பாட்டை அதிகப்படுத்த உதவுகிறது.