Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தோடர் இன மக்களின் மொர்பர்த் பண்டிகை…. நடத்தப்பட்ட போட்டிகள்… அசத்திய இளைஞர்கள்…!!

தங்களது பாரம்பரிய உடைகளை அணிந்து தோடர் இன மக்கள் மொர்பர்த் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மந்து என்ற வனப்பகுதியை ஒட்டி தோடர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களது பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களை எப்போதும் கடைபிடிப்பது வருகின்றனர். மேலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முத்தநாடுமந்து தோடர் இன மக்களின் தலைமை இடமாக திகழ்கிறது. இங்குள்ள தோடர் இன மக்கள் புத்தாண்டு பண்டிகையை ஆண்டுதோறும் மொர்பர்த் என்ற பெயரில் கொண்டாடுவர். இந்த விழாவையொட்டி அங்குள்ள மக்கள் விரதமிருந்து மூன்போ கோவிலில் சென்று வழிபட்டனர்.

இந்த பண்டிகையில் தோடர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடைகளை அணிந்து மூன்போ கோவிலில் இருந்து ஒர்யள்வோ கோவிலுக்கு ஊர்வலமாக நடந்து சென்றனர். அதன் பின்னர் மீண்டும் மூன்போ கோவிலுக்கு சென்று வழிபட்டு தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். அங்கு கோவிலில் நின்றபடி தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடி பொதுமக்கள் மகிழ்ந்தனர். இதனையடுத்து ஆண்கள் தங்களுடைய வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் இளவட்ட கல்லை தூக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த கல்லின் மீது வெண்ணெய் பூசப்பட்டு இருந்தது.

இந்த போட்டியில் ஆர்வமுள்ள இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு 7௦ கிலோ எடையுள்ள இளவட்ட கல்லை தூக்கி அதன் பின் அதை முதுகுக்கு பின்புறமாக போட்டனர். இது குறித்து தோடர் இன மக்கள் கூறும் போது, இந்த மொர்பர்த் பண்டிகையை இங்கு வசிக்கும் தோடர் இன மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவர் என கூறினர். இந்த பண்டிகையின் போது நாட்டில் நல்ல மழை பெய்து, விளைச்சல் அதிகமாகி, வளர்ப்பு பிராணிகள் நன்றாக இருக்க வேண்டும் என வழிபட்டனர். மேலும் உலகத்தையே அச்சுறுத்தும் கொரோனா நோயிலிருந்து மக்கள் கூடிய விரைவில் விடுபட வேண்டும் என்று வழிபட்டதாக கூறினர்.

Categories

Tech |