Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எப்படியெல்லாம் ஏமாத்துராங்கப்பா…. 15 1/2 கோடி சுருட்டிய மோசடி மன்னனை…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

ரூபாய் 15 1/2 கோடி சுருட்டிய மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னையில் வில்லிவாக்கத்தை சேர்ந்த பி.எம்.ரெட்டி என்ற முத்துகிருஷ்ணன் ரூபாய் 15 1/2 கோடி மோசடி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது “பி.எம்.ரெட்டி என்ற முத்துகிருஷ்ணன் இன்ஜினியரிங் கல்லூரி வளர்ச்சிக்காக ரூபாய் 200 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி சுமார் 15 1/2 கோடி கமிஷன் தொகை பெற்று மோசடி செய்துள்ளார்.

இதனால் முத்துகிருஷ்ணன் குண்டர் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடைய பினாமி பெயரில் வாங்கி வைக்கப்பட்டிருந்த 120 பவுன் தங்க நகைகள் மற்றும் 15 அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் முத்துகிருஷ்ணனின் கூட்டாளிகள் பெயரில் இருக்கும் 15 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |