Categories
மாநில செய்திகள்

மோசடி முதல் ரீ-பண்ட் வரை…… “ஐ-போன்-க்கு பதில் சோப்பு” சைபர் க்ரைம் முயற்சி…. வாடிக்கையாளர் மகிழ்ச்சி….!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அலுவா பகுதியில் நூருல் அமீன் என்பவர் வசித்து வந்தார்.இவர் வெளிநாடு வாழ் இந்தியர். மேலும் இவர் கடந்த 12 ஆம் தேதி அன்று ஆன்லைன் வர்த்தகம் வலைதளத்தில் ரூ.70,900 ஐ-போன் ஆர்டர் செய்துள்ளார். இந்த ஆடர் கடந்த 15ஆம் தேதியன்று டெலிவரி செய்யப்பட்டது. நூருல்  அமீன் அதை பிரிக்கும் முன் வீடியோ எடுத்து உள்ளார். அதன் பிறகு அந்த பார்சலை திறந்து பார்த்தபோது ஐபோனுக்கு பதிலாகவும் சோப்பு மற்றும் ஐந்து ரூபாய் நாணயம் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து அவர்  காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அந்த புகாரின் பெயரில் போலீசார் சைபர் கிரைம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் நூருல் அமீன் வாங்கபட  வேண்டிய ஐபோனை கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஜார்கண்ட் மாநிலத்தில் யாரோ பயன்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் நூருல் அமீனுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டது. மேலும் ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்கள் வாங்கும்போது இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருவதாக வாடிக்கையாளர்கள் தங்கள் வருத்தத்தை தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |