உலகிலேயே செல்போனில் அதிக நேரம் செலவிடுபவர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் யுகத்திற்கு மாறி விட்டனர். அழும் குழந்தைகளுக்கு கூட செல்போனை கையில் கொடுத்தால் அழுகையை நிறுத்தி விடும் அளவிற்கு மாறிவிட்டது இன்றைய நவீனமயமான காலம். செல்போன் மூலம் சமூக வலைத்தளத்தில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். சிலர் இணையத்திலேயே மூழ்கி கிடப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் உலகிலேயே செல்போனில் அதிக நேரம் செலவிடுவார்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக நோக்கியா நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியர்கள் தினமும் சுமார் 5 மணி நேரம் செல்போன் பயன் படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.