Categories
உலக செய்திகள்

மிகப் பிரபல நடிகர் விமான விபத்தில் மரணம்… Shocking…!!!

அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி திரைப்படமான “டார்சான் இன் மன்ஹாட்டனில்” டார்சானாக நடித்திருந்த ஜோ லாரா விமான விபத்தில் உயிரிழந்தார்.

அமெரிக்காவில் டென்னசி என்ற விமான நிலையத்தில் இருந்து நேற்று சிறியரக விமானம் ஒன்றில் நடிகர் ஜோ லாரா மற்றும் அவரது மனைவி க்வென் ஷாம்ப்ளின் லாரா இருவரும் பயணித்தனர். இவருடன் விமானி உட்பட 7 பேர் இருந்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

1989 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிரபல தொலைக்காட்சி திரைப்படமான “டார்சன் இன் மன்ஹாட்டனில்” டார்சானாக லாரா நடித்திருப்பார். 1996 முதல் 97 வரை இந்த தொடர் வெற்றிகரமாக ஓடியது. இதன் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமான நடிகராக வலம்வந்தார். இவரது மனைவி க்வென் ஷாம்ப்ளின் லாரா, ‘வெயிட் டவுன் மினிஸ்ட்ரீஸ்’ என்ற பயிற்சி குழுவின் தலைவர் ஆவார். இவர்கள் இருவரும் இணைந்து 1999 டென்னசியின் பிரென்ட்வுட்டில் ஒரு தேவாலயத்தை நிறுவி அதனை நிர்வகித்து வந்தனர். இருவரும் தற்போது விமான விபத்தில் இறந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |