Icelandair வெளியிட்ட இரக்கமுள்ள நாடுகள் பட்டியலில் கனடா மூன்றாம் இடத்தை பெற்றிருக்கிறது.
உலக நாடுகளிலேயே இரக்கம் அதிகம் உள்ள நாடுகள் என்ற அடிப்படையில் ஒரு தரவரிசைப் பட்டியல் Icelandair என்ற விமான நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதில் முதலிடத்தில் நியூசிலாந்தும், இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும், மூன்றாவது இடத்தில் கனடாவும் இருக்கிறது.
அதாவது ஒரு நாட்டில் இருக்கும் மருத்துவ சேவை, குறைவான சம்பளம், அந்நாட்டில் வாழும் பிற நாட்டவர்கள் எதிர்கொள்ளக்கூடிய அனுபவங்கள் மற்றும் உலக சமாதான தரவரிசைப் பட்டியலில் பெற்றுள்ள இடம் போன்றவற்றை வைத்து இந்த தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.
கனடா, மருத்துவ சேவையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு சமமான புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. மேலும், உலக சமாதான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய நாட்டை விட அதிகமான புள்ளிகளை பெற்றிருக்கிறது. எனினும் குறைவான சம்பளம், பிற நாட்டவர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நன்கொடை போன்றவற்றில் கனடா பின்தங்கியிருக்கிறது.
அமெரிக்கா இப்பட்டியலில் 16வது இடத்தை பெற்றிருக்கிறது. இந்தப் பட்டியலில் அமெரிக்க நாட்டின் மருத்துவ சேவைக்கு குறைந்த புள்ளிகள் தான் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.