நாளுக்கு நாள் உலகம் நவீனமயமாக்கப்பட்டு , பல்வேறு தொழில்நுட்பங்கள் நம்மை ஆச்சரியபட வைக்கும் வகையில் சென்று கொண்டு இருக்கின்றது. எந்த அளவுக்கு தொழிநுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளதோ அந்த அளவுக்கு புது புது தொழில்நுட்ப பாதிப்புகள் ஏற்படுவது வாடிக்கையாக நடைபெற்று வருகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் சைபர் செக்யூரிட்டி நிறுவன சமீபத்திய ஆய்வு நம்மை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அதில் பயனர்கள் பொழுதுபோக்குக்கு பயன்படுத்தும் வலைத்தளத்திலும் , விக்கிப்பீடியா போன்ற இணையத்தை பயன்படுத்துவோரின் ஆட்வேர் தகவலை திருடுகின்றது. இதனால் பயனர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று கேஸ்பர்ஸ்கை எச்சரித்துள்ளது.
மேக் OS தளத்தில் பயணர்கள் உலவும் போது அதன் முழு விவரமும் ஆட்வேரில் பதிவாகும். இதில் உள்ள பயனர்களின் விருப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு , குறுஞ்செய்திகள் , விளம்பரம் தொடர்பான தகவலை சம்மந்தப்பட்ட நிறுவனகளுக்கு இந்த மால்வேர் அனுப்புகின்றது. இந்த பாதிப்புக்குள்ளானவர்களின் இந்திய பயனர்களின் எண்ணிக்கை அதிகம் எனபது வேதனையான விஷயமாக பார்க்கப்பட்டுகின்றது.
சைபர் செக்யூரிட்டி ஆய்வு விவரம் :
அமெரிக்கா (31 %),
இந்தியா (18.9 %),
ஜெர்மனி (14 %),
ஃபிரான்ஸ் (10 %)
பிரிட்டன் (10 %)