இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக இலங்கையில் பலத்த மழை பெய்து வருவதால் களு, களனி, தெதரு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, அதிகளவு தண்ணீர் அணைகளிலிருந்து திறக்கப்பட்டதால் கொழும்பு, கம்பா, கலுட்ரா, பட்டாளம், ரத்னபுரா என பத்து மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளனது. மேலும் அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 60 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 2.71 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளப்பெருக்கில் தண்ணீர் சூழ்ந்ததால் 800 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேசமயம் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 16,000 பேர் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஏற்பட்ட பேரிடரான நிலச்சரிவு மற்றும் கன மழையில் 17 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். இதையடுத்து போர்க்கால அடிப்படையில் கப்பல் படையினர் மற்றும் ராணுவத்தினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து கனமழை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம் நிலச்சரிவால் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.