Categories
தேசிய செய்திகள்

நாட்டிலேயே அதிக மக்கள் தொகை மாநிலம்… ஒரே நாளில் நுற்றுக்கணக்கானோருக்கு கொரோனோ!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2069 இலிருந்து 2301ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 இல் இருந்து 56ஆக அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் 113 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மீரட், கோரத்பூர் நகரை சேர்ந்த இருவர் கொரோனா வைரசுக்கு பலியாகியுள்ளார். இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக கொரோனா உறுதியான 172 பேரில் 42 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என உத்தரப்பிரதேச அரசு தகவல் அளித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவ பணியாளர்கள் அலெர்ட் செய்யப்பட்டுள்ளனர். நாட்டிலேயே பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசம் உள்ளதால் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் மிக குறைவான மருத்துவ தரம் உள்ள மாநிலம் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இதனால் சிறப்பாக செய்யப்பட கூடிய தேவை இருப்பதால் மருத்துவமனை டீன்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். மருத்துவர்களுக்கு ரொடேஷன் ஷிப்ட்டில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இதனிடையே கர்நாடகாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 125ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |