உலக அளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் நிறுவனம் 2022-ம் ஆண்டு முடிவடைய போவதால், 2022-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட பல நிகழ்வுகள் குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டில் அதிக அளவில் தேடப்பட்ட தென்னிந்திய நடிகைகளின் லிஸ்ட்டை google நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த லிஸ்டின்படி அதிகம் தேடப்பட்ட நடிகைகளின் பட்டியலில் காஜல் அகர்வாலின் பெயர் தான் முதலிடத்தில் இருக்கிறது. நடிகை காஜலுக்கு இந்த வருடம் நீல் என்ற ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதன் பிறகு 2-ம் இடத்தில் நடிகை சமந்தாவும், 3-ம் இடத்தில் ராஷ்மிகா மந்தனாவும், 4-ம் இடத்தில் தமன்னாவும், 5-ம் இடத்தில் நடிகை நயன்தாராவும் இருக்கிறார்கள். இதனையடுத்து 6-ம் இடத்தில் நடிகை அனுஷ்காவும், 7-ம் இடத்தில் நடிகை பூஜா ஹெக்டேவும், 8-ம் இடத்தில் கீர்த்தி சுரேஷும் இருக்கிறார்கள். மேலும் 9-ம் இடத்தில் நடிகை சாய் பல்லவியும், 10-ம் இடத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் இருக்கிறார்கள்.