Categories
அரசியல்

இந்த வருடத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை என்ன தெரியுமா?… சிறப்பு தொகுப்பு இதோ…!!!

2022-ஆம் வருடத்தில் Woman என்னும் வார்த்தை தான் அதிகம் தேடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் வருடத்தின் இறுதியில் இருக்கும் நாம் இந்த வருடத்தின் தேடு தளங்களில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை குறித்து பார்ப்போம். அதன்படி, டிக்ஷனரி டாட் காம் என்ற தனமானது இந்த வருடத்தில் Woman என்ற வார்த்தை தான் அதிகம் தேடப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது. மேலும், Woman என்ற வார்த்தையை, வேர்ட் ஆஃப் தி இயர் என்றும் அறிவித்துள்ளது.

இதற்கான காரணம் என்ன? என்பதையும் அந்த தளம் விவரித்துள்ளது. பாலினம், மொழி,  அடையாளம் போன்றவற்றின் ஆதிக்கம் எந்த அளவிற்கு இந்த காலத்தில் கலாச்சாரத்துடன் இணைந்துள்ளது என்று அடிப்படையில் தான் woman என்னும் வார்த்தை அதிகம் தேடப்பட்டிருக்கிறது என்று தேர்வு செய்ததாக குறிப்பிட்டிருக்கிறது.

இந்த வருடத்தில் உலக அளவில் அரங்கேறிய முக்கியமான நிகழ்வுகளில் பெண்களின் பங்களிப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதையும் இது காட்டுகிறது என்பது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |