மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அம்மாச்சி கோவில் நந்தவன பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரும் சேகர் மற்றும் முருகன் ஆகிய 3 பேரும் இணைந்து மணிமுத்தாறில் இருந்து மோட்டார் சைக்கிளில் மணல் மூட்டைகளை கடத்தி வந்து தேவகோட்டை நகர் பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து 2 மோட்டார் சைக்கிளில் 3 பெரும் மணல் கடத்தி வந்த போது டவுன் காவல் துறையினரிடம் கையும் களவுமாக சிக்கி கொண்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த மணல் மூட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர்.