Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து- இருசக்கர வாகனம் மோதல்…. பரிதாபமாக இறந்த பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி தலை நசுங்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திம்மாம்பேட்டை பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுமித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு திருப்பதி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சுமித்ராவின் தம்பி மனைவி சரஸ்வதிக்கு தற்போது குழந்தை பிறந்த நிலையில் அவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

அதனால் அரசு மருத்துவமனைக்கு சரஸ்வதியை அவரது குழந்தையுடன் திருப்பதி இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று கொண்டிருக்கும் போது சரஸ்வதிக்கு துணையாக இருப்பதற்காக சுமித்ராவும் அதே இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்து வந்த நிலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் சரஸ்வதி, திருப்பதி மற்றும் சரஸ்வதியின் குழந்தை ஆகிய 3 பேரும் இடது புறமாகவும், சுமித்ரா வலது புறமாகவும் கீழே விழுந்துள்ளனர்.

இதனையடுத்து அரசு பேருந்தின் பின்புற சக்கரம் சுமித்ரா தலை மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் படுகாயமடைந்த திருப்பதி, சரஸ்வதி மற்றும் அவரின் குழந்தை ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |