வேன் மோதி பேருந்து ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் கோவில் பகுதியில் சித்தார்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது நண்பரான ஜெயசீலன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது தூய நெஞ்சக் கல்லூரி அருகாமையில் சென்ற நிலையில் திடீரென வேன் மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சித்தார்த் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பிரகாஷ்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற வேன் ஓட்டுனரை வலைவீசி தேடி வருகின்றனர்.