மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமத்தில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஆரியமாலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் தனது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த வேனின் டயர் வெடித்ததால் சாலையில் தாறுமாறாக ஓடி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் ராஜமாணிக்கம் மற்றும் ஆரியமாலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வேன் ஓட்டுனர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இது குறித்து தகவலறிந்து உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தப்பிச் சென்ற வேன் ஓட்டுனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதில் கோபமடைந்த சிலர் விபத்து ஏற்படுத்திய வேனை அடித்து உடைத்து நொறுக்கி உள்ளனர்.
இவரைத் தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து உங்களுடைய கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் கூறியதால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். பின்னர் விபத்தில் உயிரிழந்த தம்பதியின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.