இருசக்கர வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புத்தேரி பகுதியில் அருணகிரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெருங்களத்தூர் கிராமத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படிக்கும் தன்னுடைய பேரனுக்கு கல்லூரி கட்டணம் செலுத்திவிட்டு கல்லூரியின் அருகாமையில் வந்து கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.